என்னவன் என்னை விட்டு பிரிகிறான்

என்று உன் முகத்தை பார்த்தேனோ
அன்றே என் முகத்தை நான் மறந்தேனடா !
குழந்தையின் சிரிப்பில் தன்னிலை மறந்து ரசித்த நான்
இன்று உன் சிரிப்பை பார்த்து என்னை
வெறுத்து உன்னை ரசித்தேனடா !
இனிய ராகங்களை ரசிக்க நினைத்த நான்
இன்று உன் பேச்சை ரசிக்க தவித்தேனடா !
நீ பார்க்காதபோது நான் உன்னை பார்க்கிறேனடா !
நீ என்னை விட்டு விலகி சென்றாலும் உன் நினைவுகள்
என்னை கொல்லாமல் கொல்லுதடா !
நீ என் என்னவன் மட்டுமல்ல
என் உயிர்க்கும் மேலானவனடா !
உன்னை பற்றி பேச மொழிகள் போதாதுடா !
உலகில் மொத்த மொழிகளை சேர்த்தாலும்
உன்னை பற்றி பேச மொழிகள் போதாதுடா !
நீ என்னை பார்த்து சிரித்தால் அந்த சிரிப்பை
வாழ்நாள் முழுவதும் காணவேண்டும் என்ற
ஏக்கம் இமைகளின் ஓரம் நீராய் உருகுதடா !
நீ என்னிடம் பேசிய வார்த்தைகளை
நான் ஆயிரம் முறை சொல்லி ரசிக்கிறேனடா !
என்னவனே எனக்கு நீ வேண்டாம் ,ஆனால்
உன் இனிய நினைவுகள் மட்டும் என்னுடன் வேண்டுமடா !