காதல் ஒரு கோப்பை

தெரியாமல் இல்லை
காதல் என்பது
ஹார்மோன்களின் களேபரம்
காமதேவனின் நர்த்தனம்
வாலிபத்தின் வீரியம்
ஆயினும் விலக மனமில்லை
இரும்பான இதயத்தை
ஈர்த்த காந்தத் துண்டு
அவளது விழிகள்.....
பிறகென்ன
அறிவியல் மாற்றம்
நிகழ்ந்ததென்னுள்....
வெப்ப வினைகள்
வேதி வினைகளாய் உருமாறி
ஆர்கிமிடிஸ் கோட்பாடு
எனை ஆட் கொண்டது
காந்த பாயம்
உடல் முழுதும் பரவ
அது பரமானந்தம்....உ
ஈர்ப்பு விசை உணர்ந்தேன்....
ஒரு கோப்பை காதல் பருக
உள்ளம் விரும்பி ஏங்கும் போது
ஒரு கோப்பை கண்ணீர் தந்து
பிளமிங் விதி போன்று
கை காட்டி சென்று விட்டாள்

எழுதியவர் : சித்ரா ராஜ் (22-Aug-14, 10:43 pm)
சேர்த்தது : சித்ராதேவி
Tanglish : kaadhal oru koppai
பார்வை : 205

மேலே