முரணின் தேடலில்-2

================================
சாலையோர வெளிச்சத்தில்
கண் இருண்டவனின் தட்டுகளில்
கையிட்டுப் பிசைகிறது பசி...
================================
கீழ்த்தட்டு மானியத்தையும்
மேல்தட்டு தள்ளுபடியையும்
நடுத்தரம் மானத்தையும்
சுமக்கிறது வங்கிக் கடனில்....
================================
புதிய ஆட்சி பதவியேற்பில்
பழைய அறிவிப்பு, கஜானா காலி.
அடுத்த அடி, விலையேற்றம்...
===================================
பழைய தேங்கிய திட்டங்களுக்கும்
புதிய தீட்டும் திட்டங்களுக்கும்
அதே கஜானா கண்மூடி திறக்கிறது...
===================================
விலையேற்ற வித்தையில் அரசு
குட்டிக் கரணமிடுகிறான்
மைதந்த ஜனநாயக மன்னன்...
================================
பிடித்தவனை விடாது ஆட்டும்
விடுத்தவனை பிடிக்காது வாட்டும்
பணமெனும் காகிதப்பேய்....
================================

எழுதியவர் : சர்நா (23-Aug-14, 7:01 pm)
பார்வை : 297

மேலே