எனக்கே நான் சுமையாய் ஆனேன்
அன்பே!
என்னென்று சொல்ல
உந்தன் உறவை,,,
உன் மௌனங்கள்
இடைவிடாது தொடர்ந்தே
உன்னவளின் உணர்வுகள்
உறைந்து போய்விட்டதடா...
உன் உறவால் கிட்டியது,
எதிர்பார்ப்புக்களும் ;
ஏமாற்றங்களும் ;
தோல்விகளுமே!
உனக்குப் புரியவில்லை,
உன்னை பார்த்த நொடி முதல்
என் விழிகள்
தூக்கம் தொலைத்தன!
என் நிம்மதிகள்
விடை கேட்டுப் போயின!
என் இரவுகள்
தலையணை நனைத்த
நாட்கள் மட்டுமே எஞ்சின!
இன்று எல்லாமே முடிவாகி,
ஆயினும் உனக்கான என் காதல்
விடைகொடுத்தும்
கதவோரம் நின்று - என்னோடு
பல கதை பேசுதடா..!
நீ தந்த ஏமாற்றங்களும்
உனக்கான எதிர்பார்ப்புக்களும்
சுகமானவை என்றிருந்தேன்;
இன்று தான் புரிகிறது,..
நான் எனக்கே சுமையாகிப் போனதை!