பிரிவென்னை கொல்லுதடி

உன் கண்கள் கண்ணீரை உதிர்க்க
நான் கலங்கி போனேன்.
என் நெஞ்சம் பதறி போக
நீ துடித்து போனாய் .
உறவு அறியா நம் நட்பை
புரியாமல் நாம் மட்டும் இன்றி
உலகம் கூட குழப்பத்தில் ...
கிண்டல் கேலிகள் உன் பேச்சில்
நான் இல்லை அந்நேரம் உன்னுடன் .....
உன் முகம் சோர்ந்து போக
அருகில் வந்து துணை நிற்பேன் உன்னுடன் ...
இன்று வந்த பிரிவு என் கண்ணீராக மாறி நிற்கும் முன்
ஏனோடி உன் கண்களில் கலக்கம் ...
உன் துணை நிற்க நான் வருவேன்
வேண்டாம் என்று விலகி நிற்கிறாய் ....
உன் நிழலை பிரிந்த உடலாய்
தவித்து நிற்கிறேன் நானும் .....
காரணம் சொல்லாமல் கொள்கிறாய்
பிரிவென்னும் நெருப்பில் .....


என்றும் உங்கள்
உமா நிலா

எழுதியவர் : உமா நிலா (24-Aug-14, 1:51 pm)
பார்வை : 122

மேலே