நீ இன்றி

அன்பனே!
உன்னை கண்ட நாழிகைதனை
கனவென்று மறுக்கவில்லை,
கற்பனை என்று ஒதுக்கவில்லை,
கானலென்று எண்ணவில்லை!
என் உயிரென்றே நேசித்தேன் ...

கண் இமைக்கும் நொடிதனில்
என் கண்களுக்குள் விழுந்தவனே,.
நீ என் கண்ணாகி இருந்தாலும்
கண் இன்றி வாழ்திருப்பேன்,
நீயோ ...
என் உயிராகிவிட்டாய்..

உயிரின்றிய வாழ்வு
எங்கடா சாத்தியம்?
நான் உயிர் வாழ
ஆசைப்படுவதாய்
எண்ணிவிடாதே...
உயிரே..........
நீ இன்றி வாழ முடியவில்லை!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (24-Aug-14, 9:55 pm)
Tanglish : nee indri
பார்வை : 301

மேலே