அழகான வாழ்க்கை ஆனந்தமாய் காலங்களின் நிறைவில்

சொந்த மண்ணில் விதைக்கப்பட்ட என் முதல் நாள் அது
விதைக்கப்பட்ட இடம் அறியாது போனது ..
என்னை நனைத்த முதல் ஈரம்
என் அம்மாவின் அழுகை...
கண் திறந்து பார்த்தபோது
வெறும் சத்தத்தின் மத்தியில் நான் ....
இடம் பெயர்க்கப்பட்டது போன்ற
ஓர் பரிணாம வளர்ச்சி ....
நாட்கள் நாளும் வளர்வது போல
பல வேதியல் மாற்றங்களுக்கு உட்பட்டு
நானும் வளர்ந்தேன் ......
அழகான வாழ்கையில் ஆனந்தமாய் :-):-):-)

கனவு என்பதறியாது
உருவங்கள் தெரியாது
வாசம் மட்டுமே அறிந்திருந்தேன்
உறவுகளின் பாசத்தால்
அழகான வாழ்க்கையில் ஆனந்தமாய் :-):-):-)

பருவம் வளரும் மாற்றம் நிகழ்ந்தது
ஊர்கள் கூடி கும்மாளமிட
தெருவெங்கும் கோலாகலம்
இசையின் சப்தத்தில் அழகான வாழ்க்கை ஆனந்தமாய் :-):-):-)

வளரும் வயதோடு
கல்வியின் கற்பனைகளும் கரை சேர
எதிர்கால கல்யாண கனவும் காத்து நின்றது
என் அன்னையவளின் விழிகளை தழுவி
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் ...:-):-)

விழிகளும் நிரம்பி வழிய
நானும் கரை சேர்ந்தேன்
என்னவனின் கரம் பற்றி
அழகான வாழ்க்கையில் ஆனந்தமாய் .:-):-):-)

கதவடைத்து அவன் தோள் சாய
திருவிழா கோலம் பூண்டது என்தேகமெங்கும்
சமையலறையில் அத்தையவளோடு சண்டையிட நாளும் கழிந்தது
அழகான வாழ்க்கையில் ஆனந்தமாய் :-):-):-)

கண் மூடி கண் திறந்த கணத்தில்
கையில் என் குழந்தையோடு வந்து நின்றால் செவிலியவள்
ஐயிரண்டு மாதங்கள் கழிந்து ...
அழகான வாழ்க்கை இன்னும் ஆனந்தமானது ...:-):-):-)

என் அழகான வாழ்க்கை தொடர்ச்சியாக என் பெண் அவளோடும் பயணப்பட
நானும் ஓர் மகளாய் என்னை உணர்ந்தேன்
என் மகளும் ஓர் அன்னையானபோது
காலங்களின் நிறைவில் அழகான வாழ்க்கை ஆனந்தமாய் ....:-):-):-)

எழுதியவர் : சுமித்ரா (24-Aug-14, 9:54 pm)
பார்வை : 305

மேலே