அழகான வாழ்க்கை ஆனந்தமாய் அமைந்திடுமே

அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
அமைந்திடவில்லை எனக்கதறி
சேர்த்துவைத்த பணம்நகை மூட்டையாய்க்கட்டி
முனிவரிடம்சென்று இவையனைத்தும் ஆனந்தம்
தரவில்லை ஏன்எனக் காரணம்கேட்டான்

கண்ணைமூடி மந்திரத்தைச் சொல்வாய்
எதுநடந்தாலும் கண்ணைத்திறவாதே என்றார்
பெரும்சத்தம் கேட்டு ஒன்றரைக் கண்ணால்பார்த்தான்
மூட்டையுடன் முனிவர் ஓடிக்கொண்டிருந்தார்
திடுக்கிட்டு ஏமாந்ததை உணர்ந்தான்

சுதாகரித்து அவர் பின்னால்ஓடி
வெடுக்கென மூட்டையைப் பறித்தான்
சிரித்தப்படி முனிவர்க் கேட்டார்
இப்போது எப்படி இருக்கிறதென்று
மிகவும் சந்தோசமாக இருக்கிறதென்றான்

வந்தபோதும் இந்தமூட்டை கையிலிருந்தது
ஆனாலும் அதுஇன்பம் தரவில்லை
ஒருகணம் இழந்துப் பின்கிடைத்ததும்
ஆனந்தம் என்றிப்போது சொல்லுகின்றாய்
சற்றே சிந்திப்பாய் மகனே

ஆனந்தம் என்பது பணமோபொருளோ
கிடையாது அதுஉள்ளத்தில் உன்எண்ணத்தில்
இருக்கிறது இறைவன் கொடுத்தப்பரிசு
உண்மைஉணர்ந்தால் உன்அழகான
வாழ்க்கை ஆனந்தமாய் அமைந்திடுமே

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (24-Aug-14, 9:29 pm)
பார்வை : 99

மேலே