நான் காத்திருப்பேன்

ஆற்ரங்கரையோரம்
தண்ணீர் குடம் கொண்டு
கன்னி நான் தனியாகப்
போகையிலே...!!!

தாகம் என்னும் பெயர்
சொல்லி மோகம்
கொண்டு வந்து நின்றான்
என் முன்பாகவே அவன்...!!!

வெட்கத்தோடு என் கண்
அவனை நோக்கையிலே
மெதுவாக புன்னகை வீசி
விட்ட மைந்தன் அவன்...!!!

வீடு தேடி வந்து சீர்
தேவையில்லை சீதையைக்
கொடுத்து விடுங்கள் என்று
துணிச்சலாகச் சொல்லிச்
சென்ற ஆண் மகன் அவன்..!!

வருவானடி என்னவன்
அதுவரையும் காத்திருப்பாள்
இந்தச் சின்னவள்....!!!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (26-Aug-14, 2:08 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : kavithai
பார்வை : 75

மேலே