என் மூச்சு
சாலையில் நான் ஆயிரம் மனிதர்களை கண்டாலும்,
உன்னைக் காணும் அந்த ஒரு நொடியில்
என்னில்
ஏதோ ஒரு சலசலப்பு
ஏதோ ஒரு படபடப்பு
ஏதோ ஒரு துடிதுடிப்பு
ஏதோ ஒரு புத்துணர்ச்சி
என்னை மறந்து வானில் பறப்பது போல் ஒரு உணர்ச்சி
இவற்றை யெல்லாம் உனக்கு புரிய வைப்பதற்க்குள் நின்றுவிடும் என் மூச்சு!