அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
சூரியன் வந்து எழுப்புதட உன்னை
அதிகாலையின் அழகை ரசிக்க
சேவல் கூவி அழைக்குதட உன்னை
புத்துகுலுங்கும் மலரை ரசிக்க
அலைபேசி அலறியவுடன் எந்திரிக்க
நீ என்ன எந்திரமா...
பறந்து விரிந்த வானத்தை பாரடா
பறவைகள் பேசும் மொழியை கேளடா
நீ பார்த்ததென்னவோ அலைபேசி திரையைதானட
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ வாடா
தோழா அழகான வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ..
அலை கடலின் ஓசையை கேளடா
அது சொல்லும் தத்துவத்தை கேளடா
முயற்சியை விடாத அலை
உறுதியை விடாத கறை
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ வாடா
தோழா அழகான வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ..
மரங்கள் பாடும் பாடலை கேளடா
அது சோகப்பாடலா இல்லை
ஆனந்த பாடலா என்று
அது எந்த பாடலாக இருந்தாலும்
வானம் கண்ணீர் விடும் ....
இது தானடா இயற்கையின் இயல்பு
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ வாடா
தோழா அழகான வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ..
ஒருநாள் வாழும் பூவை பாரடா
அதுகூட ஆனந்தமாய் வாழுதடா
அது ஆனந்தமாய் இல்லை என்றால்
அழகாய் இருக்காதடா...
ஆனந்தம் தான் அழகு என்றால் வாடா
ஆனந்தமான வாழ்க்கையை அழகாக வாழ வாடா..