தொலைந்து போனோம்

பிழைப்பு தேடி தொலைந்து போனோம்...
பணம்தான் பெரிதென நினைத்தோம்!
நாங்கள் தாய்மண் இழந்து வந்தவர்கள்!
தாய்மடியின்றி தனிமையில் தவிக்கிறோம்
அயலூர்க்காரர்கள் தான் நாங்கள்
ஆகவேதான் அயராமல் உழைக்கிறோம் !
பகல்முழுதும் பணிச்சுமை இருப்பினும்
இரவினில் ஏங்குகிறோம் இழந்ததையெண்ணி
உற்றார் உறவினர் உறவுகளுக்கு
உணர்வுகளை எப்படி சொல்ல?
பாதி வாழ்க்கை எங்களுடன் இழக்கும்
எங்கள் மனை மக்களை என்னவென்பது?
கண்கவர அங்கு வந்துவிட்டு
கண்ணீரும் இங்கே வந்து விடுகிறோம்
நான் பிறந்தப்ப என் அப்பா அயல்நாடு
என் அப்பா இறந்தப்ப நான் அயல்நாடு
விடியலுக்கு காத்திருந்து புறப்படுகிறோம்
விடிந்த பின் இங்கேதான் இருக்கிறோம்
எங்கள் வாழ்வே வேடிக்கையானது!
பிழைப்பு தேடி தொலைந்து போனோம்...
தாய் மண்ணில் வாழ..
தகுதியற்றவர்களாகி தவிக்கிறோம்..