அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
கூரை வீட்டில்
கூழ் உண்டு
கிழிந்த உடை அணிந்து
கால் வாகனத்தை ஓட்டி
படிப்பின் வாசனை அறியாமல்
விவசாயமே உலகமாய் வாழும்
எங்கள் வாழ்க்கையும்
அழகாய் தொடர்கிறது
ஆனந்தமாய் வாழும்பொழுது...

