மரணம் தொடும் முன்னே
மரணம் தொடும் முன்னே
உன் சம்மதம் சொல் பெண்ணே
கனவாகி போகாமல் என் காதலை
காத்திடு என் கண்ணே
கவிதை சொல்லிடவா
உன் காதல் வாங்கிடவே
உன் கண்ணை காத்திடவா
உன் காதல் வாங்கிடவே
தங்கத்தால் அலங்கரித்து
வைர கிரிடம் வைத்து
பட்டு புடவையால் பூ சுற்றி
உன்னை அழகு செய்ய
என்னிடம் வசதி இல்லை
அன்பால் அரவணைத்து
இன்னொரு தாயாய் தாலாட்டி
உனக்கொரு தோழனாய் வலம் வருவேன்
உன் காதல் வாங்கிடவே
என்னை பிடிக்குமென்றால்
நம்பிக்கை கொண்டிருந்தால்
எனக்கொரு வாய்ப்பு கொடு
உன்னோடு வாழ்ந்திடவே