மணியனின் கதறல்

கொளத்து மடையில
குத்த வச்சுதான்
கொக்கு ஒண்ணு
காத்துக் கிடக்கு . . . .

கொத்தப் போவதை
மறந்த மீனுதான்
குட்டிக் கரணத்தால்
அந்தரத்தில் துள்ளிக் குதிக்கு. . . .
=======================

புழக் கடையில
பூன ஒண்ணுதான்
பூப்போல நட நடக்கு. . . .

அப்பாவி எலியுந்தான்
தப்பாக வந்துதான்
சாப்பாடு ஆகிக் கிடுச்சு . . . . .
======================

படிச்ச புள்ளயும்
பாதை தெரியாம
பழகித்தான் தொலைச்சிடுச்சு . . . .

வெறி கொண்ட
வேங்கையும் நல்லா
வேடிக்கை காட்டி
வேண்டியதை சாதிச்சிடுச்சு . . . . .
====================

போன தடவையும்
போட்ட ஓட்டும்தான்
பொத்தலாக ஆகிவிடுச்சு. . . .

வந்த நோட்டும்
தந்த பானமும்
தொண்டைக்குள்ளே தங்கிக்கிடுச்சு . . .
=====================

என்ன செய்வது
எங்கள் ஆண்டவா
ஏனடா இந்தப் பொறப்பு . . . .

எப்பத் தீருமோ
எங்க சாபமோ
ஏதாச்சும் திட்டம் துவக்கு . . . .
====================

பாவம் இல்லையா
படும்பாடே தொல்லையா
பரிகாரம்தான் சொல்லையா. . . .

எங்க விடுதல
என்னும் விடுகத
எப்படித்தான் தீரும் கணக்கு. . . .
கொஞ்சம் இடஞ்சுட்டிப் பொருள் விளக்கு . . . .

*-*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*









குறிப்பு :- ஏதோ தோனுச்சு
ஏதேனும் பிழையிருந்தால்
உங்க வூட்டுப் புள்ளையாட்டம்
நினைச்சுக்கோங்க.

எழுதியவர் : மல்லி மணியன் (29-Aug-14, 1:06 am)
பார்வை : 123

மேலே