கூட்டல் கழித்தல் பெருக்கல் இளமைக்கு அறிவுரை

இளங்காலை நேரம்
ஆதவனின் உறக்கம் களையும்
அந்நேரம் நீ எழுந்து
அக்கறையாய் படிக்கணும்

முன்னிரவு தூக்கம்
மூளையின் சோர்வதனை போக்கும்
கண்ணுறக்கம் வேண்டும்
கண்மணியே நீ உறங்கு
பள்ளியில் சொல்லும் பாடத்தை
அதிகாலையில் மனனம் செய்ய வேண்டும்

ஆர்வமதை கூட்டு
சோம்பலை நீ கழி
அன்பினால் பெருக்கு
என்றும் நன்மைதான் உனக்கு

எழுத்து வேலையெல்லாம்
முன்னிரவுக்கு முன் முடித்திடு
முடிந்தவரை விளையாட்டை குறைத்திடு
படிப்பு வாழ்க்கையை உயர்த்தும்
வாலிபத்தில் அது புரியும்

நல்நட்பை பெருக்கு
நன்மைகளை கூட்டு
பகைமைதனை கழித்து
வாழ்வதனில் களிப்புறு !!

எழுதியவர் : கனகரத்தினம் (29-Aug-14, 6:14 am)
பார்வை : 49

மேலே