கூட்டல் பெருக்கல் கழித்தல்-------நிஷா
கவி எழுத புறப்பட்டேன்...புதுக்
கவி எழுத புறப்பட்டேன்
இளமை உள்ளங்களுக்காக... என்
இனிய செல்லங்களுக்காக....
அன்பு நெஞ்சங்களே! என்
அருமை மாணவர்களே
கற்றிடு கற்றிடு - பல
கலைகளை கற்றிடு...
பற்றிடு பற்றிடு ....
படிப்பை பற்றிடு....
புதிது புதிதாய்-நல்ல
பாதைகள் வகுத்திடு..
அன்பை விதைத்திடு
பண்போடு வளர்ந்திடு
பொறுமை கூட்டிடு
கடமையை உணர்ந்திடு....
போட்டிகள் பெருக்கிடு
பொறாமைகள் தவிர்த்திடு
முயற்சியை கூட்டிடு
முன்னேற்றம் கண்டிடு...
வெறுப்பை கழித்திடு உன்னுள்
வேகம் கொண்டிடு..
உண்மைகள் உரைத்திடு
உறுதியோடு போராடு...
ஆசானை மதித்திடு-அவர்தம்
அறிவுரை கேட்டிடு
பெற்றோரை பேணிடு
பெரியோர் சொல் நடந்திடு..
புத்தகங்கள் வாசித்திடு
புதுமைகள் செய்திடு
அறிவியல் வழியிலே
அதிசயங்கள் நிகழ்த்திடு...
நல்லவை எல்லாம்
நாளும் செய்திடு
நாட்டின் பெருமையை
உலகுக்கு உயர்த்திடு....