உன் முகம் காண
கண்டறியா
காலங்களையும்
கணப்பொழுதில்
கிழித்துப்பார்த்தேன்....
பிரபஞ்சத்தின்
பிற்கால
பக்கங்களையும்
அலசி ஆராய்ந்தேன் .....
தொலைதூரத்தில்
தொலைத்து விட்ட
சலனங்களையும்
தேடிப்பார்த்தேன் .....
விசித்திரங்களின்
விந்தைகளையும்
வியந்து
விமர்சித்தேன்.....
காணா உன் முகம்
காண சொர்கத்தின்
விலாசத்தை காதலிடம்
கேட்டறிந்தேன்.....
நிபந்தனைக்கு
உட்பட்ட பிரதேசங்களிலும்
உத்தரவின்றி
பிரவேசிக்கிறேன் ..
என் மரணத்திற்கு
முன்பாவது
உன்னை சந்தித்து
விடலாம் என்ற
நப்பாசை
உன் பிள்ளைக்கு
உண்டு என்பதால்....