ஏங்க நீங்க எங்கீங்க

எத்தனை முறை அப்பப்பா
நினைத்து பார்க்க கூட முடியவில்லையே
நெஞ்சே வெடித்து விடும் எனக்கு!

சத்தியம் செய்தாயே
என்னை பிரிய மாட்டேன் என்று!

என் உயிரை விட மேலாய்
உன்னை நம்பி வந்தேனே நான் அன்று!

எத்தனை "ஏங்க"

ஒரு நாளைக்கு என்று
எல்லோரும்
கூட என்னை கேலி செய்வார்களே
அத்தனையும் உன் பத்திரத்துக்காகவே!
ஏங்க பார்த்து போங்க!
ஏங்க பத்திரமா போங்க!
ஏங்க மெதுவா போங்க!
ஏங்க அவசரபடாதீங்க!
ஏங்க நல்லா சாப்புடுங்க!

இன்று

ஏங்க! நீங்க என் கிட்ட சொல்லாமையே போய்ட்டீங்க?
என் உயிரின்றி உயிர் வாழ்கிறேன் நான்
உன் உதிரத்தின் ஜீவனுக்காக!

எழுதியவர் : priyaraj (29-Aug-14, 2:55 pm)
பார்வை : 135

மேலே