அழுகை
முதன் முதலில்
பள்ளிக்கு செல்கையில்
அழுது கொண்டே
சென்றாள்
எனது மகள் .
நாள் ...... வாரமானது
வாரம் ...... மாதமானது
மாதங்கள் சென்றன...
ஆனால் அழுகை மட்டும்
......... செல்லவே இல்லை
அழாமல் செல்ல மாட்டாளா
ஏங்கியது
மனம்...
தற்செயலாக
அழாமல் சென்று விட்டால்
என் மகள்.
நான்
வீ ட்டிற்கு
திரும்பினேன் ....
.
.
அழுதபடி ! ?