பாச மழை

குழந்தைக்கு தன்
குட்டி முத்தம் கூட
குத்த கூடாது என
குட்டி தாடியையும்
களைய துடிக்கும் =தந்தை

அம்மு குட்டி பசியால்
அழ நினைப்பதை கூட
அடியோடு தகர்க்க நினைக்கும் = தாய்

பேர பேத்திகளின்
தூளிக்காக
வாயில் சேலையை
வாயிலில் போடமால்
பாதுகாக்கும் = பாட்டி

புகையிலையின்
நெடியால் பாசம் புகைந்து விட கூடாது
என்றெண்ணி பேரனுக்காக
புகையிலையை பதுக்கும் = தாத்தா

தங்கை செய்த தவறை
தான் செய்ததாக கூறி
தண்டனை வாங்கும் = அண்ணன்

மாங்காய் அடித்து
மாட்டி கொண்ட
அண்ணனை
அப்பாவிடமிருந்து
அடி வாங்காமல் தடுக்கும் == தங்கை

சுய நலம் எனும்
வரட்சியான சூழ்நிலையில்
சமுதாயம்
சிக்கி தவித்தாலும்


பாசம் எனும்
மழையும்
பொழிந்து கொண்டு தான் இருக்கின்றது
என எண்ணும் போது

கண்களின் விளிம்பில்
ஆனந்த கண்ணீர் !!!!!

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (29-Aug-14, 5:10 pm)
Tanglish : paasa mazhai
பார்வை : 266

மேலே