மறைக்கப்பட்ட இந்திய வரலாறு
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
=====================
காந்தி நினைத்திருந்தால்
பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்...
ஆனால்...! அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ்
கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக
தேவைப்பட்டார் காந்திக்கு இணையாக
வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும்
விரும்பினார். சுதந்திரப் போராட்ட காலத்தில்,
தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட
அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் .
அதனால் தான் பகத்சிங்,
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர்
அம்பேத்கர் போன்ற
தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார்.
இவர்களெல்லாம் வன்முறையாளர்கள்
போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள்
போலவும் சித்தரித்துக்காட்டுவார்.
இப்படித்தான் இந்த தேசத்தின்
விடுதலையை போராட்டத்தின்
மூலமாகவும், புரட்சியின்
மூலமாகவும் தான் பெறமுடியும்
என்று பிரிட்டிஷாருடன்
சினங்கொண்டு போராடிய பகத்சிங்
என்ற மாவீரனை இழந்துவிட்டோம்.
காந்தி நினைத்திருந்தால்
அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில்
பலரும் எதிர்ப்பார்த்தார்கள். இன்னும்
சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும்,தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தார்கள்.
இதை புரிந்துகொண்ட காந்தி, 1931-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த
பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்கள்
பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள்
என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள்
என்று முன்
கூட்டியே அறிந்துகொண்டார்.
அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள்
கட்டளைப்படி தான் பிரிட்டிஷ் அரசிடம்
பேசி பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார்.அப்படியெல்லாம்
ஒன்றும் நடந்துவிடக்கூடாது என்பதில் காந்தி தீவிரம்
காட்டினார். அதனால் அன்றைய பிரிட்டிஷ்
வைஸ்ராய் இர்வினை (Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய
காந்தி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால் தான் பிரிட்டிஷ்
அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பகத்சிங்,
ராஜகுரு, சுக்தேவ்
போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931 மார்ச் மாதம் 24- ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக
அறிவித்தது. ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரை
கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள்.
அதனால் 23 - ஆம்
தேதியே இரவு 7.04
மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும்
தூக்கிலிட்டார்கள்.
வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில்
சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான்
மரபு. ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள்
என்பது குறிப்பிடத்தக்க து. 24 - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட
வேண்டியவர்களை 23-ஆம் தேதி இரவே அவசர அவசரமாக தூக்கிலிட்டனர்.
பகத்சிங்கை கொல்வதில்
காந்தியை விட பிரிட்டிஷ்
ஆட்சியாளர்கள் இன்னும் ஒரு மடங்கு வேகம் காட்டினர்.
லாகூர் சிறையிலிருந்த
பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு தயார்படுத்துவதற்காக
சிறைக்காவலர்கள் முன் கூட்டியே 23 ஆம் தேதி மாலையே அழைத்தார்கள்.
மறுநாள் தான் தூக்கு தண்டனை என்று அறிந்திருந்த பகத்சிங், முன்கூட்டியே முதல்
நாளே தூக்கிலிடப் போகிறார்கள் என்பதை அறிந்திருக்கவில்லை.
அதனால் காவலர்கள் அழைத்த போது, ''நான் இங்கே ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டி ருக்கிறேன். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள்''
என்று சிறைக்குள்ளிருந்து குரல்கொடுத்தார்.
வேறு யாரோ போராளி சிறைக்குள்ளே புகுந்து இருவரும்ஏதோ திட்டம்
தீட்டுகிறார்களோ என்று காவலர்கள்
பயந்துவிட்டனர். சிறிது நேரம்
கழித்து அவரே வெளியே வந்தார்.
உள்ளே பார்த்தால்
அவரோடு வேறு யாரும் இல்லை.
ஆனால் அவர் கையில் ஒரு புத்தகம்
இருந்தது. மாமேதை லெனின் எழுதிய
"அரசும் புரட்சியும்" (STATE AND REVOLUTION) என்ற புத்தகம் தான்அது. அதுவரையில் அந்த
புத்தகத்தை படித்துக் கொண்டிருந்ததால்,
நான்ஒரு போராளியுடன்
உரையாடிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னார்.
அந்த புத்தகத்தை காவலர்கள்
வாங்கிப்பார்த்த போது, அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் ''
இந்த புத்தகத்தை இந்திய மக்கள்
அனைவரும் படிக்க வேண்டும் ''
என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார்.
இது தான் இந்திய
மக்களுக்கு அவர் கடைசியாக
விடுத்த வேண்டுகோள்!