காத்திருக்கும் கனவுகள்

உள்ளில் புதைந்த
உயிரே..!!
உயிரில் கலந்த
உணர்வே..!!
உந்தன் பொக்கிஷ
நினைவுகளை..
விதைத்த பின்பே...
என்னில் கனவுகளும்
பூக்க ஆரம்பித்தது....!
இன்றும்
பூத்தவண்ணமாய் இருக்கிறது..!
பூக்கும் கனவுகள் யாவும்
என் மனக்கூண்டில்
காத்திருக்கிறது..
உன் கைப்பட கழுத்திலும்...
என் கைப்பட எழுத்திலும்...
மாலையாக....!!!

எழுதியவர் : லில்லீ (30-Aug-14, 12:54 am)
பார்வை : 198

மேலே