பித்ரு
![](https://eluthu.com/images/loading.gif)
மரக்கிளையில்
நீண்ட கருத்த அலகோடு
இறக்கை கோதுகிற
காகத்திற்கு
கையில் உணவுடன்
தன்னைப்போலவே
கரைந்தழைப்பவர்
தனக்கு
என்ன உறவென்பது பற்றி
எந்தப் புரிதலுமில்லை -
வடாகம் கொத்துகையில்
விரட்டியடிக்கும்
கவனம் பற்றியும்
மேலும்
தான் யாருடைய பித்ரு
என்பது பற்றியும்