கூட்டல் கழித்தல் பெருக்கல்

கூட்டு மாணவனே கூட்டு
நல்லுணர்வையும்
தனிதிறனையும்
மனிதநேயத்தையும்
நற்பண்புகளையும்
நல்லொலுக்கத்தையும்
கூட்டு
அத்துடன் கொஞ்சம் புத்தியையும் தீட்டு ...
கழித்திடு மாணவனே கழித்திடு
கெட்ட எண்ணங்களையும்
தீய பழக்கங்களையும்
ஆணவத்தையும்
தீய நண்பர்களையும்
பொறாமையையும்
பேராசையையும்
கழித்திடு
அத்துடன் கொஞ்சம் தீண்டாமையையும் ஒழித்திடு...
பெருக்கிடு மாணவனே பெருக்கிடு
உதவுதலையும்
நன்றியுணர்வையும்
பொருமையையும்
மகிழ்ச்சியையும்
மன்னித்தலையும்
பகிர்தலையும்
பெருக்கிடு
அத்துடன் கொஞ்சம்
பெரியோர் அறிவுரையையும் கேட்டிடு ...

கூட்டி கழித்து பெருக்கி வாழ்க்கையை வாழ்ந்திடு மாணவனே !!

எழுதியவர் : கனி (30-Aug-14, 10:55 pm)
பார்வை : 266

மேலே