லஞ்ச புகழ்ச்சி அணி
பணிவாய் குனிந்து நின்றிட வேண்டும்
பாதயாத்திரை பல கண்டிட வேண்டும்
குறைகள் மறைக்க குழைந்திட வேண்டும்
'பொருள்'பட கனமாய் பேசிட வேண்டும்
புன்னகை மலராய் பூத்திட வேண்டும்
மானம் இருப்பதை மறந்திட வேண்டும்
மன்னிப்பை மறவாமல் கோரிட வேண்டும்
ரகசிய ரசிகனாய் மாறிட வேண்டும்
சமயங்களில் ரட்சகனாய் மாற்றிட வேண்டும்
சட்ட வார்த்தைகளை பூட்டிட வேண்டும்
வசதிகளை வாய்ப்புகள் ஆக்கிட வேண்டும்
தேவையெனில் தாசிகளை தந்திட வேண்டும்
தாமதங்களை தணிக்கை செய்திட வேண்டும்
ஆறாம் அறிவினை அழித்திட வேண்டும்
குறைவின்றி 'குடி'த்தனம் அமைத்திட வேண்டும்
பலசாதி பழமொழி உரைத்திட வேண்டும்
இந்திய சமுதாயத்தில் இணைந்திட வேண்டும்.