காதல்

நான் கவிதை எழுதுவேன் என்றதும் கேட்கப்பட்ட முதல் கேள்வி யாரை காதலிக்கிறாய் ? அவர்களிடம் என் பதில் எனக்கு காதல் பிடிக்காது எங்கோ திருடிய உணவை கூட்டிலிருக்கும் தன் குஞ்சுகளுக்கு முத்தம் கொடுத்து ஊட்டும் காகத்தை !பால்காரனை ஏமாற்றி பாலை மடியில் ஒழித்து வைத்து தன் கன்றிற்கு கொடுக்கும் பசுவை ! பொட்ட கோழி கூவியா பொழுது விடிய போகுது என்னும் பழமொழியை பொய்யாக மாற்றி தன் குஞ்சுகளுக்கு ஆபத்தெனில் சேவலை போல் சீரும் கோழியை !அழகான வானில் ஆண்களை தன் கவர்ச்சியால் மயக்க ஆடையின்றி இரவில்மட்டும் வரும் நிலவை !விடுமுறையின்றி வேலை செய்வதாலோ என்னவோ கோபத்தை மனிதர்கள்மேல் காட்டும் சூரியனை !சுயநலமிக்க மனிதர்களை பொதுநலமாய் சூரியனிடமிருந்து காப்பாற்ற தன் நண்பர்களான சூரியனையும் நிலவையும் பிரிய மனமின்றி மனிதர்களுக்காக பிரிந்து அழும் வானத்தை ! வானத்தை பிரிந்த மழை சோகம் தாங்காமல் மலையிலிருந்து தற்கொலை செய்து தனது ஆத்மாவை கடலில் கலக்கும் நதியை ! மனிதன் சுயநலத்திற்காக தன் வாழ்கையை இழந்தும் மனிதன் சுவாசிக்க ஆக்சிஜன் தரும் இயற்கையை நேசிக்கிறேன் ஐயய்யோ !! நானும் காதலிகிறேனோ ?பெண்ணை மட்டுமே நேசிப்பது காதலென்றால் இவற்றை நேசிப்பதும் காதல்தானே ?

எழுதியவர் : nanam (31-Aug-14, 7:41 am)
சேர்த்தது : நான குமார்
Tanglish : kaadhal
பார்வை : 101

மேலே