என் தோழிக்காக---------நிஷா

'நிஷா' என்று அழைக்கவா
நீ பேசிய முதல்வார்த்தை....
நம் நட்பின் நினைவலைகளில்
முதல் அத்தியாயம்..,
---------------------------
அன்னை மடி தேடும்போதெல்லாம்
ஆறுதல் தந்திட்ட உன் வார்த்தைகள்
நம் நட்பின் நினைவலைகளில்
இரண்டாம் அத்தியாயம்....
-----------------------------
அடுக்கடுக்காய் பணக்கட்டை
அருகருகே வைத்து
அலுவலக வேலையிலே
அவசரம் நான் காட்டிடும் போது
'பொறுமையாத்தான் செய்யேன்டி
பொறுப்பான உன் அறிவுரைகள்
நம் நட்பின் நினைவலைகளில்
மூன்றாம் அத்தியாயம்......
----------------------------
உணவருந்தும் வேளையிலே
உச்சந்தலையில் கைதாங்கும்
என் பழக்கமதை
உதவாத குணமென்று
தட்டிவிடும் உன் விரல்கள்
நம் நட்பின் நினைவலைகளில்
நான்காம் அத்தியாயம்.......
------------------------------
பேசுகின்ற வார்த்தையிலே
புன்னகையும் பொறுமையும் கலந்து
'என்னடி பன்ற பொண்ணே...?'
அடிக்கடி என்னை தேடும் அழகு
நம் நட்பின் நினைவலைகளில்
ஐந்தாம் அத்தியாயம்.....
---------------------------
ஆறுமணிநேரமும்...
உன்னருகில் நான்...
தினம் தினம்
திகட்டாத
உன் அன்பு மழை....
நம் நட்பின் நினைவலைகளில்
ஆறாம் அத்தியாயம்.....
--------------------------
இன்று
ஏனோ அழுகின்றேன்
ஏதோ நினைக்கின்றேன்
அடுத்தடுத்த அத்தியாயங்கள்
எனக்கில்லாமல் போனது
என்னைவிட்டு நீ பிரிந்து போவதால்..
-------------------------
(என் உடன் பணிபுரிந்த தோழி பணிமாற்றம் பெற்று வேறு கிளைக்கு செல்கிறாள்...அவளுக்காக
. எழுதியது..)

எழுதியவர் : நிஷா (31-Aug-14, 8:51 am)
பார்வை : 131

மேலே