என் அன்னை
தாயே என் தாயே
கருவில் எனை சுமந்தாயே...
தவமிருந்து என்னை நீ பெற்றாயே
தாலாட்டி தன் மடியில் தூங்க வைத்தாயே...
மூங்கில் காற்றாய் முன் வந்து
மூச்சினில் நிறைந்து சுவாசமும் தந்தாயே...
தன் வயிற்று பசி மறந்து
நிலவின் வெளிச்சத்தில் சோரூட்டி மகிழ்ந்தாயே...
தூக்கி கொஞ்சிய கரங்கள்
உதிரம் சொட்ட உழைச்சு காத்ததும் நீயே..........
தாயே என் தாயே
கருவில் எனை சுமந்தாயே..........
களத்து மேட்டினில் நெல் கதிரடித்து
கருவேலங் காட்டினில் முள் விறகெடுத்து
பானை நிறைய சாதம் வடிக்கும்
தாயின் கைமணம் நாவில் பொங்கும் தினம்...
மழைக் காற்றாய் மனதை உரசுவாள்
அந்த நேசத்திலே நெஞ்சம் துள்ளும்...
மழைதனில் நான் நனைந்திடக் கண்டால்
அவள் சேலையே குடையாக மாறும்...
தீ பிழம்புகள் என்னை சுட்டால்
மயிலிறகு கைகள் மருந்து போடும்...
என் கண்ணில் சிறு தூசு விழுந்தால்
அவள் கண்ணுல காட்டாறும் ஓடும்..........
தாயே என் தாயே
கருவில் எனை சுமந்தாயே..........
தாயே நீ தந்த பாசம் கலந்திடாது
துளி அளவும் வேசம்...
தாயே உன் தாலாட்டில் தணியாது சுகம்
நீ இல்லையெனில் மலராது என் முகம்...
கல் தடுக்க கிழே விழுந்து
வலி உணராது எழுந்து வந்தாய்...
முள்ளு குத்த நானும் வந்தேன்
மனம் முறிஞ்சு போக துடித்தாயே...
தனிமையில் நான் நடந்து வந்தேன்
நிழலாய் என்னோடு வாறாயே...
பூவிழி இமை திறந்து பார்த்தேன்
கானல் நீராய் காட்சி தாறாயே...
மல்லிகையின் மணமோ தாமரையில் வீசாது...
பெற்ற தாயின் குணமோ எவருள்ளும் வாராது...
ஆகாய கங்கை தீர்த்தம் என்றாலும்
அன்னையின் நெற்றி வியர்வைக்கு ஈடாகாது...
என்னுடன் நீ இருந்தாலே போதும்
உலகம் விரல் நுனியாக மாறும்...
என்னை பிரிந்து கொஞ்ச தூரம் போனாலும்
உயிர் உதிர்ந்து போகும் சற்று நேரம்..........
தாயே என் தாயே
கருவில் எனை சுமந்தாயே..........