மீண்டும் ஒருமுறை

மீண்டும் ஒருமுறை வேறொரு தாய்க்கு
அதே கருவில் பிரசவித்து இருப்பான்....!

மீண்டும் ஒருமுறை வாடகை வீட்டில்
அதே வெளிச்சமும் காற்றும் உட்புக உறங்கியிருப்பான் ....!!

மீண்டும் ஒருமுறை ஓடி வரும் கால்களும்
தூக்கிய கரங்களும் வேறாக அதே இடத்தில் விழுந்திருப்பான் .......!!!

மீண்டும் ஒருமுறை உடனிருந்த நண்பர்களின்
முகவரிகள் வேறாக அதே இடத்தில் மணல்வீடு கட்டியிருப்பான்........!!!!

மீண்டும் ஒருமுறை அரும்பிய மீசையின் ஆசையோடு
உருவத்தில் ஆள் வேறாக பருவம் அடைந்திருப்பான் .......!!!!!

மீண்டும் ஒருமுறை வந்த சொப்பனங்களில்
வந்த அழகிகள் வேறாக சுவைகள் பருகியிருப்பான் .....!!!!!!

மீண்டும் ஒருமுறை கட்டிய கட்டணத்தில் கருத்தில்லாமல்
காதலியின் காதலுக்காக பெயர்கள் வேறாக காவல்காரனாயிருப்பன் .....!!!!!!!

மீண்டும் ஒருமுறை அங்கமெங்கும் சிறகுகள் விரிக்க
அவளை கண்ட தவம் பெற்றவனாய்
பறவைகள் வேறாக உலகெங்கும் அலைந்திருப்பான் .......!!!!!!!!!

மீண்டும் ஒருமுறை வெள்ளை தாளில் கரைகள் படிய
விரும்புகிறேன் என்ற சொல்லை மொழியக்கியிருப்பான் .....!!!!!!!

மீண்டும் ஒருமுறை விரும்புகிறேன் என்ற சொல்லை
அழுத்த திருத்தமாக அவைகள் வேறாக அவளிடம் உதிர்த்திருப்பான் .....!
யாரோ சிலருள் அவனும் ஒருவனாய் ....


மீண்டும் ஒருமுறை மிதிபடும் படிகட்டுகளாயிருப்பான்
எதிர்பார்ப்போடு அவனும் அவளின் பதிலுக்காக .....!!!

மீண்டும் ஒருமுறை கிடைத்த பதிலில் கிரங்கி போய்
கண்ணம் சிவக்க இடைவெளிகள் இல்லாமல் இசைந்துகொண்டிருப்பான் ...!!!!

மீண்டும் ஒருமுறை வெறிப்பிடித்த பித்தனாய்
இல்லாதவளை தேடி சித்தம் கலங்கி சிரித்துகொண்டிருப்பான் .....!!!!!

மீண்டும் ஒருமுறை சில்லறைகளை கூட பொறுக்கி எடுத்து
பெட்டிகடைக்காரனையும் வியாபாரியாக்கியிருப்பான் ....!!!!!

மீண்டும் ஒருமுறை அவளே கதியென்று அடி உதைகள் வாங்கி
நீயே விதியென்று சரணாகதி அடைந்திருப்பான் ....!!!!!!

மீண்டும் ஒருமுறை போனால் போகட்டுமென்று
உலகின் பொன்மொழிகளுக்கெல்லாம் உரியவனாகியிருப்பான் ....!!!!!!!

மீண்டும் ஒருமுறை இரவோடு இரவாய்
கடல் அலையின் வாசத்தில் கலந்துவிட்டிருப்பான் ....!!!!!!!!!

மீண்டும் ஒருமுறை புத்தகங்களிடம்
அமைதியை இரவல் கேட்டு கொண்டிருப்பான் .....!!!!!!!!!!

மீண்டும் ஒருமுறை தன்னை தாண்டியவளை மறந்து
இரண்டாம் அத்தியாயம் எழுத அடித்தளமிட்டுருப்பான் ..........!!!!!!!!!

மீண்டும் ஒருமுறை அவனும் கவிஞனாகியிருப்பான்
தன் காதலிக்காக .... அந்த அப்பாவி காதலன்
கண்ணீரிலும் கவிதை வடித்து ...!!!

எழுதியவர் : சுமித்ரா (31-Aug-14, 9:03 pm)
Tanglish : meendum orumurai
பார்வை : 129

மேலே