இடைச்செருகல்கள்
நின் மலர்முகத்திர்க்கு
கருஞ்சாமரம் வீசிட
முன்னெற்றி எட்டிடும்
முடிகளை
ஒன்றாய் சேர்த்தெடுத்து
நின் காதின்
பின் செருகிடும்
செருகல்களும்
$$$$$$$$$$$$$$$%$$$%$$$$$$
அதுவரை வெறும்
வெத்துப்பாத்திரங்களான
உன் வீட்டு பத்துப்பாத்திரங்களை
எப்படியும் முத்துப்பாத்திரங்களாக்கிடும்
பகீரத முயற்ச்சியில்
அமர்ந்திடும் முன்
இடப்பக்கம் இருந்திட்ட சேலைத்தலைப்பை இடைசுற்றி
இடுப்பில் சொருகிய
செருகல்களும்
இவ்வுலகிலிருக்கும் எம்மொழி்
இலக்கியவாதியும்
இலக்கணவாதியும்
இம்மியும்
இடையூறின்றி
இன்முகத்துடன்
ஏற்றுக்ககொள்ளக்கூடிய
"இடைச்செருகல்கள்"

