வாழ்வாவது மாயம்

அழகிய என் வாழ்வை கசக்கி
பிழிய என்றே ஒருவன் துணிந்து
வந்து விட்டான் - அவன் என்
வசந்த வாழ்வை மீண்டும் பிழிவ தற்குள்
நான் பல தூரம் கடந்தாகவேனும்
அவன் மீண்டு எழுவதற்குள் இன்னும்
பல சவால்கள் கடந்தாகணும்
அவன் மீண்டு வருவதற்குள் இன்னும்
புது வாழ்வு வாழவேனும்
என்றோ ஒரு கவிஞன் பாடிச்சென்றான்
வாழ்வாவது மாயம் - அது மண்ணாவது திண்ணம் என்று
அதுவும் ஏதோ உண்மை போலவே இருக்கின்றது
என் வாழ்வு என்றும் வசந்த மயமாகவே இருக்க
வேண்டும் என்று இறை ஆசை இருந்தால் மீண்டும்
என் வாழ்வு துளிர் விடும் - அதே போல என்னுடைய
வாழ்வு சுவர்க்கத்தில் நிச்சயிக்க படும் என்றால்
அதனையும் ஏற்றுக்கொள்ள நான் தயார் - இல்லை
எனது வாழ்வில் இரண்டும் இன்றி நிர்கதியாய்
இருந்தால் அதையும் தாங்கிக் கொள்ள நான்
தயாராகவே உள்ளேன்.

எழுதியவர் : புரந்தர (1-Sep-14, 5:20 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 86

மேலே