தண்டனை
கவிஞன் கையில்
கிடைத்திருந்தால்
கவிதைகளை ஊற்றாய் படைத்திருக்கும்..
ஓவியன் கையில்
கிடைத்திருந்தால்
கற்பனைகளை காட்சிகளாய் விரித்திருக்கும்..
ஆசிரியன் கையில்
கிடைத்திருந்தால்
மதிப்பீடுகளை செவ்வனே செய்திருக்கும்..
எழுத்தாளன் கையில்
கிடைத்திருந்தால்
காவியங்களை அர்த்தமாய் மாற்றிருக்கும்..
பொறியாளன் கையில்
கிடைத்திருந்தால்
கணிதங்களை மனனமாய் பதித்திருக்கும்..
மருத்துவன் கையில்
கிடைத்திருந்தால்
நோய்களை கொன்று தீர்த்திருக்கும்..
வியாபாரி கையில்
கிடைத்திருந்தால்
வித்தைகளை கற்று தேர்ந்திருக்கும்..
அட..
கைதியின் கையில்
கிடைத்திருந்தால் கூட
தத்துவங்களை புதிதாய் உதித்திருக்கும்..
ஏனோ,..
நீதிபதியின் கையில்
கிடைத்ததால்
மரித்துபோனது எழுதுகோல்..
மரணதண்டனை வழங்கியபடி...!