நீ நானாக நான் நீயாக
நெருப்பாய் நீ இருந்திருந்தால்
விளக்காய் நானிருந்திருப்பேன்
நீராய் நீ இருந்திருந்தால்
உப்பாய் நானிருந்திருப்பேன்
தேராய் நீ இருந்திருந்தால்
அதில் சிலையாய் நானிருந்திருப்பேன்
படகாய் நீ இருந்திருந்தால் உன்
துடுப்பாய் நீ நானிருந்திருப்பேன்
நீ மலராய் இருந்திருந்தால் உன்
மணமாய் நானிருந்திருப்பேன்
நீ நானாக இருப்பதால் நான் நீயாக இருக்கிறேன்.....