என்ன கோபம்

பெண்ணே ! உனக்கு என்
மேல் அப்படி என்ன கோபம்
தென்றல் உன்னைத் தொட்டுச்
செல்ல அனுமதிக்கிறாய்
வெயில் உன்னை ஸ்பரிசம்
செய்ய அனுமதிக்கிறாய்
மழை உன்னை அணைத்துக்
கொள்ள அனுமதிக்கிறாய்
ஆனால் நீ உன் கைப்பிடிக்கக்
கூட என்னை அனுமதிப்பதில்லை

பெண்ணே ! உனக்கு என்
மேல் அப்படி என்ன கோபம்
பூக்கள் கேட்காமலே நீ
அவைகளை முத்தமிடுகிறாய்
பட்டாம் பூச்சி கேட்காமலே நீ
அதன் பின் ஓடுகிறாய்
கண்ணாடி கேட்காமலே நீ
அதைப் பார்த்து சிரிக்கிறாய்
ஆனால் ஒரு வருடமாய் உன்
பின்னால் அலையும் என்னைப்
பார்த்து ஒரு புன்னகைக் கூட
செய்ததில்லை

பெண்ணே ! உனக்கு என்
மேல் அப்படி என்ன கோபம்

எழுதியவர் : fasrina (2-Sep-14, 9:29 am)
Tanglish : yenna kopam
பார்வை : 207

மேலே