புதிய சிறைகள்
சுவாசப்பையில் சிறிது
சிகரெட் புகையையோ, கந்தக வாசத்தையோ
நிரப்பி கொள்..
நாக்கடியில் வசவுகளையும்,
விழிகளில் உண்மைகளையும்
புதைத்து கொள்..
இமைகளுக்குள் கண்ணீரையும்,
நாடிகளுக்குள் போதையையும்
சேமித்து கொள்..
ரகசியங்களுக்காக காதுகளையும்,
காயங்களுக்காக மனதையும்
திறந்து கொள்..
காட்சி பொருளாய் காதலையும்,
சாட்சிக்கு சகல தெய்வங்களையும்
கூட்டிக் கொள்..
வயதிற்கு ஏற்ப சதிகளையும்,
வாழ்வின் பெருங்கனவுகளையும்
வளர்த்துகொள்..
வரலாற்றில் கொஞ்சம்
வருங்காலத்தில் கொஞ்சம்
வார்த்தைகளை
தேடிகொள்..
வெட்கமென்ன..!
மானமென்ன..!
வாழ்ந்திட வேண்டி
நிமிர்ந்து நின்று "மானிடன்" என்று
உரைத்துகொள்..