எல்லாமே மூன்று எழுத்து 02
நொடியில் எல்லாம் இழந்துடுவாய்.....
நொடியில் சேமிப்பாய் துன்பம் ...
அத்தனைக்கும் காரணம் ...
கோபம் ....!!!
############
எதுவுமே நிலையில்லை என்றிரு ...
வந்ததை தொடர்ந்து வைத்திராதே ...
இளமையை தொலைத்தவர் பலர் ....
சோகம் .....!!!
#############
வயதுக்கு மீறிய சிந்தையால் ....
வயது வரம்பு தெரியாமல் ...
தொடக்கூடாததை தொடுவது ..
மோகம் .....!!!
#############
திரட்சியாக இருந்தால் கவர்ச்சி
தளர்ந்து போனால் முதிர்ச்சி ...
நிலையற்றதே இதன் மெய் ....
தேகம் .....!!!
##############
எல்லாம் உன்னை விட்டு அகலும்
அகல அகல் துன்பம் பெருகும் ....
எதற்கு நிச்சயம் உண்டு ...
பிரிவு ......!!!