கைபேசி களிப்பு
சேர்ந்து செயல்படுவோம்! சேர்ந்து செயல்படுவோம்!
ஓர்ந்து மனது மகிழ்ந்தேன்நான் -கூரறிவு
கொண்ட அகன்வாழ்க! கொள்கை அதும்வாழ்க!
விண்ட விதமே சிறப்பு!
கைபேசி மூலம் கலந்துரை யாடினேன்
மெய்பேசி ஐயா அகனுடன்- பொய்பேசும்
எண்ணம் இலாத எளியோன் அபிநான்நல்
வண்ணம் வளரும்நம் நட்பு.