பார் பறவையே
தாரிட்டு மூடிட்டாலும்
தன்னம்பிக்கையோடு முளைக்கும்
இத் தழைகளின் அழகை பார் பறவையே...
காரிருட்டு மறைத்திட்டாலும்
தன்னம்பிக்கையோடு ஒளிரும்
அந் நிலவின் அழகையும் பார் பறவையே...
கயிறுட்டு இழுத்திட்டாலும்
தன்னம்பிக்கையோடு காக்கும்
இத் தேர்சாணியின் அழகை பார் பறவையே...
நாரிட்டு கட்டிட்டாலும்
தன்னம்பிக்கையோடு மணக்கும்
அம் மல்லிகையின் அழகையும் பார் பறவையே...
அணையிட்டு அடைத்திட்டாலும்
தன்னம்பிக்கையோடு ஆர்பரித்துவரும்
இவ் ஆறின் அழகை பார் பறவையே...
புயல் ஒன்று கடந்திட்டாலும்
தன்னம்பிக்கையோடு தாங்கும்
அம் மலையின் அழகையும் பார் பறவையே...
பேரிடி இடித்திட்டாலும்
தன்னம்பிக்கையோடு ஆடும்
இம் மயிலின் அழகை பார் பறவையே...
சிறுதுன்பம் நேர்ந்திட்டவுடன்
தன்னம்பிக்கை இழக்கும்
அம் மனிதனின் அழுகையையும் பார் பறவையே.....