சுகம் தரும் சொர்க்கம்
பார்த்தேன் யோசித்தேன்
இரவினில் தூங்காது யோசித்தேன்
எனக்கு சரியா தவறா புரியாமல் ,
என் குடும்பம் எங்கள் பழக்கவழக்கம்
ஒத்துவருமா இதுவேறு அதுவேறு
நான் வளர்ந்தது பாசத்தின் பிடிக்குள்
அன்புக்கு கட்டுப் பட்டவள் நான்
அன்பான குடும்பத்தில் நானே ராணி
இதெல்லாம் நான் பார்த்து வந்த பையனுக்கு
தெரிய வாய்ப்பில்லை
என் மனதிற்கு சட்டம் போட்டேன்
இனி அவனைப் பார்ப்பதில்லை .
என் குடும்பம் எனக்காக எனக்காக
அவர்கள் தேடித்தரும் வாழ்வு
எனக்கு சொர்க்கமாகும்
எனக்காக வாழுது என் குடும்பம்
பொய்யும் புரட்டும் சேர்த்திட
ஒப்புக் கொள்ளவில்லை என் மனம்
மென்மையான காதல் வரும் வயதில்
பசுமையான எண்ணங்கள்
இனிமையான கனவுகள்
பொங்கித்தான் வழிந்தது மனதில்
ஆனாலும் அன்பும் பாசமும்
அணைத்துக் கொண்டது என்னை
அவர்கள் பார்த்துத் தந்த வரனை
மனங்கள் நிறைந்த வாழ்த்துக்களுடன்
ஏற்றுக் கொண்டேன் கணவனாக
இது எனக்கு சொர்க்கம் தான்
சொர்க்கமான வாழ்கையில்
பெற்றுக் கொண்டோம் செல்வங்களை
செல்வம் என்றால் குழந்தைகள்
அழகான வாழ்கையில் அன்பு ததும்பிட
அனைத்து உறவுகளும் உளமார
வாழ்த்துரைக்க வாழும் இல்வாழ்க்கை
இனிக்கின்றதே சுவைக்கின்றதே
இதுபோல் வருமா நாம் தேடும் வாழ்கை
இல்லை இல்லை
புகுந்த வீடும் பிறந்த வீடும் எனக்கு ஒன்றுதான்
சொக்கித்தான் வாழுகின்றோம்
சொர்க்கம் எனும் குடும்பத்தில்
சொந்தங்கள் பந்தங்கள் சுகத்துடனே