நற்றுணை

அலைகடல் செந்திலில் அருள்பவனே
அருந்துணை வேல்கைக் கொண்டவனே,
நிலையிலா உலகினில் நற்றுணையே
நீல மிடற்றோன் திருமகனே,
சிலையினில் அழகுடன் மிளிர்பவனே
செந்தூர் மேவிய குருபரனே,
கலையெலாம் தந்திடும் கந்தவேளே
காத்திட வந்திடு செந்திலோனே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Sep-14, 7:12 pm)
பார்வை : 188

மேலே