தாபம் ஒரு கேடா -சந்தோஷ்

நேற்றிரவு நடந்த
முதலிரவில்
மிச்சப்படுத்திய வெட்கரேகை
புதுமஞ்சள் பூசிய
அவள் முகத்தில்...!

மஞ்சத்தில் மயங்கிய
மன்னவனாம் என்னை
கொஞ்சம் தேகத்தில் தட்டி
கொஞ்சும் ஆசையில் குத்தி
கெஞ்சி பேசி எழுப்பினாள்.

--என்னங்க... ஏனுங்க
--மாமா.. அத்தான்
--மச்சான்.. டேய் புருஷா
என்றே விதவிதமாய்
எனக்கான
பதவிப்பிராமணம் வாசித்தாள்
அவளின் ரம்மியமான
குயில் குரலில்..!

விவாகம் செய்தவள்தானே-!! -கொஞ்சம்
காமவிவாதம் செய்வாளோ..?

செக்கச்சிவந்த செவ்விதழால்,
நேற்றிரவு அவள்
மார்பு தோப்பில்
விளையாடிய என்
மீசைரோமங்களை கடித்து
ஆசையாய் எழுப்பிவிடுவாளோ?
பேராசை ஏக்கத்தில்
போலி தூக்கத்தோடு நான்.

எதிர்ப்பார்த்தது வீண்போகவில்லையோ...!
எனது ஆண்மை மீசையில்
குறுகுறுவென ஓர்
கிக்கான உரசல்.
துறுதுறுவென ஓர்
ஷோக்கான தழுவல்.

ஆஹா..
இது என்னவளின்
அழகு விரல்தானோ....!

மீசையில் மேயும்
மருதாணியில் சிவந்த
அவள் விரலை
ஓர் காதல்கடி கடிப்போமா...?

மடார் என்று கடித்தேன்.
தீடிர் என எழுந்தேன்..!

அய்ய.........!
த்தூ த்தூ
ச்சீ ச்சீ
ஈ..............................!
என் வாயில்..!

கனவா இது..................???
ஹம்ம்ம்ம்ம்ம்.....!
--இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (3-Sep-14, 2:33 am)
பார்வை : 118

மேலே