இன்னொரு நாள்
தாயின் கருவறையில் தங்கி பார்க்க..,
ஒரு முத்தம் என என்னை தூக்கி கண்ணம் காட்டும் தந்தையை முத்தமிட..,
அஞ்சு காசு முட்டாயை வாயில் கடித்து, ஆளுக்கு பாதி என்று தரும் தோழனின் எச்சில் திண்ண.,
மீசை அரும்பு முன் ஆசை அரும்பி., பதுங்கி பதுங்கி பதினாறுகள் பார்க்க..,
கிராமத்து திருவிழாவில் முன் வரிசையில் சம்மணமிட்டு., விடிய விடிய விழித்திருந்து, வள்ளி திருமணம் பார்க்க.,
ஆடுகளை ஓட்டி விட்டு, விளையாட பொண்வண்டு தேட.,
காணாமல் போன, கல்லா மண்ணா, கண்ணாமூச்சி மீண்டும் ஆட,
இளமை காலத்தில் இன்பமாயிருந்த, இன்று தொலைந்து போன அத்திரு நாட்களில் மீண்டும் ஆனந்தமாய் நடை போட,
தாயின் கருவறையில் நான் உதைக்க வேண்டும் இன்னொரு நாள்...!