நினைவுகள் கவிதை

*
நினைவிலிருந்து மறந்து விட்டது
நினைவிற்கு வந்தது திடீரென இன்று.
*
அருந்தியவனுக்குத் தெரியும்
அருகம்புல்லின் மருத்துவக் குணம்.
*
வீழ்த்தப்பட்டவர்கள் எழுவார்கள்
வீழ்த்தியவர்கள் வீழ்வார்கள்.
*
கத்திரிப்பூ பூத்திருச்சி
காதல் மலர்ந்திருச்சி.
*
தினமொரு ஆடையணிகிறது
ஜவுளிக் கடைப் பொம்மைகள்
*

எழுதியவர் : ந.க.துறைவன் (3-Sep-14, 9:35 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 88

மேலே