காயம்

கனவுகள்...
யானியற்றிய தவங்கள்...
கைம்மாறாய் விளைந்ததென்ன?

கவிதைகள்...
எனைப்பிழிந்தெடுத்த கதறல்கள்...
கால்தடம் பதிப்பதெப்போ?

கனவுகளும் கவிதைகளும்
கதறல்களும் தவங்களும்
கண்ணீரில் கலந்திட்ட காலங்களும்

காவியமாய் ஆவதெப்போ?

வினைப் பயன் சேர்வதெப்போ?
விரல் நகம் களைவதெப்போ?

காயம் பட்ட நெஞ்சமும்
கானம் பாடும் உள்ளமும்

கண்ணீரைத் துடைப்பதெப்போ?

13.08.2001

எழுதியவர் : மனோ & மனோ (3-Sep-14, 3:35 pm)
Tanglish : KAAYAM
பார்வை : 228

மேலே