எல்லாமே அருள்கின்ற நேசனே
குழிவிழாத கண்ணம் வேண்டும்
குரல் பிசகாத வார்த்தை வேண்டும்
ஒளி வீசும் கண்கள் வேண்டும்
ஒன்றாய்ச் சுழலும் மனம் வேண்டும்!
தெளிவான இதழ்கள் வேண்டும்
தித்திப்பாய் நான் பேச வேண்டும்
கள்ளூறும் பார்வை வேண்டும்
காண்போரெல்லாம் மயங்க வேண்டும்!
கவிதை எழுதும் பேனா வேண்டும்
காற்றோடு நான் பேச வேண்டும்
ஓவிய விழிகள் நாண வேண்டும்
ஒயிலாக என்னிடம் சாய வேண்டும்!
நல்லவை எல்லாம் இன்றே வேண்டும்
அல்லவை எல்லாம் நீங்க வேண்டும்
எல்லாமே அருள்கின்ற நேசனே நீயென்
அருகினில் எப்போதும் இருக்க வேண்டும்!