தொண்டன் எழுதிய கவிதை
தலைவன்
நல்லவன் ?
மிகவும் நல்லவன் ?
பொய் சொல்லாதவன் ?
சுரண்டாதவன் ?
சுருட்டத் தெரியாதவன் ?
தொகுதியை மறவாதவன் ?
பதவியை விரும்பாதவன் ?
பார்ப்பவருக்கு இனியவன் ?
தலைவன் கேட்டான் :
ஏலே வரிக்கு வரி இந்த கேள்விக் குறி எதுக்கடா ?
நிறுத்தல் குறி ஒன்னு போடனனும்னு தமிழ் வாத்தியாரு சொன்னாரு
தலைவா !
சன நாயகத்துல கேள்விக் குறி ரொம்ப முக்கியம் இல்லையா தலைவா
சன நாயகத்தின் காவலன் உங்களுக்குப் போடாம வேற யாருக்கு
கேள்விக் குறி போடறது தலைவா ?
சாந்தி அம்மாவும் சொல்லிட்டாங்க இந்தக் கேள்விக் குறி சரிதான்னு
முதல்ல இந்தக் கேள்விகக் குறியை எடுடா ...
விழா மலரெல்லாம் ப்ரிண்டாயிடுச்சு தலைவா !
என்ன ??????????????????????????????????????
-----கவின் சாரலன்