கனவுகள் கலைத்த சாலை

போதையின் விளைவோ,
பேதையின் விதியோ,
பாதையின் பழுதோ,
விபத்தில் இறந்து கிடந்தவனைச்
சுற்றிலும்
சிதறிக்கிடந்த இரத்தத்துளிகளுடன்,
கலைந்து கிடந்தன
அவன்சார் உறவுகளின்
அத்தனைக் கனவுகளும்.

எழுதியவர் : usharanikannabiran (4-Sep-14, 4:07 pm)
பார்வை : 69

மேலே