கனவுப்படிமங்கள்

கண்ணீர் கலந்த உப்புவயலாம் மாக்கடல் சூழ்
கண்ணீர்த்துளி வடிவாய் தேசம்-ஆங்கு
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு,
நாடித்தோண்டும் தொல்லியலாளர்
கண்டெடுக்கலாம் புதைப்படிமங்களாய்,
கண்ணிவெடிகள் சிலவும் ,
விடுதலைப்புலிகள் கனவுகள் பலவும்.

எழுதியவர் : usharanikannabiran (4-Sep-14, 4:23 pm)
பார்வை : 64

மேலே