என்ன பெத்த தாயே யார் நீ

கல் நீ
உளி நீ
சிற்பி நீ
நீ வடித்த சிலை நான்

நிஜம் நீ
ஒளி நீ
உன்னை முந்தும்
உன் நிழல் நான்

கரண்ட் நீ
சிபியூ நீ
உன்னால் இயங்கும்
சிஸ்டம் நான்

இசை நீ
கவிதை நீ
நீ உருவாக்கிய
பாடல் நான்

கதை நீ
இயக்கம் நீ
நடிகன் நான்

என்னை உள்ளடக்கிய
ஓரெழுத்து நீ
உன்னால் உருவான
ஈரெழுத்து நான்

நதி நீ
நீர் நீ
ஏரி நான்

பாதை நீ
பயணம் நீ
பயணி நான்

என்னை பெத்த தாயே யார் நீ!
என்னை எதிலும் இயக்கும்
இயக்கம் நீயோ!

பணி எல்லாம் உன்னுடையது
புகழ் எல்லாம் என்னுடையது - நான்
பெறும் எல்லா புகழும் உன்னுடையது

எழுதியவர் : சதீஸ்குமார் பா ஜோதி (4-Sep-14, 4:23 pm)
பார்வை : 859

மேலே